நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டார் காளிதாஸ் அவர்கள்

08 டிசம்பர் 2023 அன்று இவ்வுலக வாழ்வை நீத்த ஈழப்பற்றாளரும், சமூக சேவகருமான திரு காளிதாஸ் சுப்பிரமணியம் மறைவுக் இரங்கல்! - அருள்மொழித்தேவன்     

அன்னார் ஆற்றிய சேவைகள் சில

அன்னார் இலங்கை ஊர்காவற்றுறை , பருத்தியடைப்பில் 13 நவம்பர் 1944 அன்று  திரு. சுப்பிரமணியம் , திருமதி. தவமணி ஆகியோருக்கு , மூத்த புதல்வனாக   *சகோதரர்கள் * சகோதரிகளுடன் பிறந்தார். கௌசாம்பிகையை திருமணம் செய்து 3 ஆண் மகவுகளைப் பெற்று வளர்த்து , மூத்த மகனை மாவீரனாக்கி , மற்றைய 2 மகன்களுடன் அவர்கள் பிள்ளைகளுடன், இன்பமாக ஈழத்துக்கு ஆதரவு, Assocation Sociale de Mere Teresa மூலம் நலிந்தோருக்குதவுவதென வாழ்ந்து, தன் 79 வது இவ்வுலக வாழ்வை நீத்தார்.
தன் ஆரம்பக் கல்வியை பருத்தியடைப்பு கதிரேசானந்த வித்தியாசாலையில் தொடங்கி , 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புவரை  கரம்பொன் சண்முகநாதன் மகாவித்தியாலயத்திலும் , கபொத சா/தரத்தை யாழ் –மத்திய கல்லூரியிலும் பெறார்.
வேலணை ஆதார வைத்திசாலையில் உதவி மருந்தாளராக பயின்றபின், சீநோர் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகக் கடமை புரிந்து, திருமலையை வாழ்விடமாக கொண்டபோது வைத்திய கலாநிதி இராஜரெத்தினம் அவர்கள் “Tringo clinic” ல் நிரந்தர மருந்தாளராக, பிரான்ஸ் வரும் வரை கடமை புரிந்தார்.
பிரான்சின் தன் வேலை, குடும்பத்துடன் ஈழப்பற்ராளராக சகல வகையிலும் தமிழர் புணர்வாழ்வுக் கழகத்துடன் கைகோர்த்து இயங்கினார். பாரிஸ் முத்துமாரியம்மன் கோவில், மக்கள்கடை போன்றவற்றில் உதவியாளராக இருந்துள்ளார். இதனூடு தாயக நலிவுற்றோருக்காக உருவாக்கிய “Assocation Sociale de Mere Teresa” மூலம் அவர் பலருக்கு உதவியுள்ளார். அவையாவன
1.மன்னார் பள்ளமடு பாடசாலைக்கு அத்திவாரமிட்டு, குழாய்க்கிணறு,  அங்கு வாழ் இஸ்லாமிய சகோதரர்கள் குடியிருப்புக்குக் குழாய்க் கிணறு அமைத்த்துடன் ,அங்குள்ள யுத்தத்தில் பாதிக்கப்பட்டு இரு கரமிழந்தவருக்கு பன்றி வளர்ப்புத் திட்டம் ஆரம்பித்துக் கொடுத்துள்ளார்.
2.புதுக்குடியிருப்பில் போரால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரமிழந்தவர்களுக்கு ஆடு வாங்கிக் கொடுத்து, அங்குள்ள வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட திறமையுள்ள 9 மாணவர்களுக்கு, வல்லிபுரக் கோவில் அரங்கில் வைத்து துவிச்சக்கர வண்டி வழங்கினார்.

2015 ல் ஊர்காவற்றுறை பருத்தியடைப்பு காடுபற்றியிருந்த சுடுகாட்டு வீதியைச் செப்பனிட்டு, குழந்தைகள் இடுகாட்டையும் துப்பரவாக்கிக் கொடுத்தது.

புங்குடுதீவுப் பாடசாலையொன்றுக்கு குடிநீரை நன்னீராக்கும் கருவி பொருத்திக் கொடுத்தது. 

உருத்திரபுரம் கருணை இல்லத்துக்கு திருமணத்துக்காக உணவு வழங்கியது.

கிளிநொச்சியில் போர்ப்பாதிப்பில் தொழில் இழந்தவருக்கு மறுதொழில் ஆரம்பிக்க குளிசாதனப் பெட்டி வாங்கிக் கொடுத்தது. இன்னுமொருவருக்கு கோழி வளர்க்க உதவியது, 

கிளிநொச்சி முறிகண்டியில் கிணறமைத்துக் கொடுத்துள்ளார்.

கிராஞ்சியில் போரால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு தென்னம்பிள்ளை கொடுத்து, தென்னை வளர்ப்பில் ஈடுபடுத்தியது.

ஜெயபுரத்தில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய நீர்தாங்கி அமைத்து, நீரேற்றும் இயந்திரமும் பொருத்திக் கொடுத்து, அங்குள்ள பாடசாலையில் கலைவிழா, பரிசளிப்பு விழாவை நேரே சென்று நடத்திக் கொடுத்துள்ளார்.

பேராற்றுவெளி முஸ்லீம் மகாவித்தியால 5ம் தர 5 மாணவர்கள் , புலமைப் பரீட்சையில் சித்தியெய்த உதவியது.

கோணலிங்க மகாவித்தியாலய மாணவர்களை “ அன்னை திரேசா நற்பணி மன்ற – அறிவகம் மூலம் 6 தொடக்கம் 11 வகுப்பு வரை , தனிக் கல்வி நிறுவனத்தால் இலவசமாக கல்வி வழங்கி அந்த மாணவர்கள் பலரைப் பல்கலைக்கழகம் செல்ல வழி வகுத்தது.

மன்னார் ஈச்சளவக்கையில் – அன்னை திரேசா கல்விச்சாலை அமைத்து , இலவச சிறப்பு வகுப்புகள் நடத்தியது.

பாட்டாளிபுரத்தில் வறிய மக்களுக்கு வாழ்வாதாரத்துக் உதவியதுடன், நீர்த்தேவைக்கு குச்சவெளி வடலிக்குள பள்ளிவாசல் ஊர் மக்களுக்கு குழாய்க் கிணறு அமைத்துக் கொடுத்து, அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கியுள்ளார்.

மூதூர் 58ம் கட்டையில் வறிய உயர்தர வகுப்பு மாணவிக்கு கல்விக்கான உதவித் தொகை வழங்கியுள்ளார்.

 புதுக்குடியிருப்பு வல்லிபுரக்கோயில் அரங்கில் 9 துவிச்சக்கரவண்டி வறுமைக்கோட்டிற்குள் உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு வழங்கியது

 பள்ளமடுவில்  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு (இரண்டு கரங்களும் இல்லை) பன்றி வளர்ப்புத் திட்டம்

 பள்ளமடுவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு(இரண்டு கரங்களும்  இல்லை)பற்ற வளர்ப்புத் திட்டம்

 பள்ளமடுவில் முஸ்லீம் இனத்தவர்களுக்கு குழாய்க்கிணறு அமைத்துக் கொடுத்தது

 புதுக்குடியிருப்பில் வாழ்வாதாரத்திற்காக ஆடு வேண்டிக்கொடுத்தது

மன்னாரில் உள்ள பள்ளமடுவில் பாடசாலைக்கு அஸ்திவாரமிடல் அதன் அருகில் குழாய்க் கிணறு அமைத்தல்
 கிளிநொச்சியில் யுத்தத்தினால் பாதிப்படைந்தவருக்கு வாழ்வாதாரத்திற்கு கோழிகள் வழங்கியது

 ஊர்காவற்றுறை பருத்தியடைப்பிலுள்ள மயானமும் குழந்தைகள் புதைக்கும் இடமும் துப்பரவு செய்தது

 உருத்திரபுரம் கருணை இல்லத்திற்கு திருமணத்திற்காக(புலம்பெயர்ந்தோர்)உணவு வழங்குதல்

 புங்குடுதீவு பாடசாலைக்கு சிறிய நன்னீராக்கும் கருவி வழங்கியது

 கிளிநொச்சியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வாழ்வாதாரத்திற்காக குளிர்சாதனப்பெட்டி வழங்கியது

ஜெயபுரம் பாடசாலை ஒன்றில் கலைவிழாவும் பாடசாலை பிள்ளைகளுக்கான பரிசளிப்புவிழாவும் நேரடியாக நின்று காளிதாஸ் ஐயா வழிநடாத்தினார்

: கிராஞ்சிக் கிராமத்தில் வாழ்வாதாரத்திற்காக தென்னங்கன்றுகள் வழங்கியது

 ஜெயபுரத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவருக்கு பெரிய தண்ணீர் ராங் அதற்குரிய ஸ்ரான்ட் உட்பட நீர்இறைக்கும்  

இயந்திரம் கொடுக்கப்பட்டது
இப்படியாக , தன் உடல் இயங்கும் வரை தன் உழைப்பையும் உடலையும் வழங்கியவர் . இவர் இப்பணியை இயன்றவரை சிறப்புற ஆற்ற உறுதுணையாக இருந்த “ பாரிஸ் வர்த்தக சங்கம் – பிரான்ஸ் “ – அங்கத்தவர்கள் அனைவரையும், அத்துடன் தனியாக அவருடன் கைகோர்த்து உதவி, ஊக்குவித்த அனைவரையும் , மிக அன்புடன் இத்தருணத்தில் நினைவில் கொள்கிறோம். இவர்கள் ஒத்துழைபின்றி இவ்வரிய பணி சாத்தியமில்லை. இவரை நம்பி பணம் உதவி இந்நற்பணிக்கு சேவையாற்றிய நல்லுள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி! 
இவர் பிரிவால் துயருறும் மனைவி, மக்கள், பேரப்பிள்ளைகள், சகோதர சகோதரிகள் மற்றும் உறவுகள் அனைவருக்கும் , மனவமைதியுடன், அவர் ஆத்ம ஈடேற்றத்துக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
ஓம் சாந்தி!

https://youtu.be/PPD0esdRXf0?t=36