உயர்தரப் பரீட்சை நிலையங்களில் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம்!
எதிர்வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு அனைத்து பரீட்சை நிலையங்களிலும் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பணித்துள்ளது.
பரீட்சை நிலையங்களுக்கு நுளம்பு விரட்டிகளை கொண்டு வருமாறு பரீட்சார்த்திகளுக்கு சமூக ஆலோசகர் லஹிரு கொடித்துவக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், பேரிடர்களின் காரணமாக பரீட்சைக்கு இடையூறுகள் ஏற்படாதவாறு பேரிடர் மேலாண்மை மையம் உரிய அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 20ஆம் திகதி நிறைவடையும்
இதற்காக 2,312 பரீட்சை நிலையங்கள் தயார்ப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. A/L பரீட்சைக்கு 333,185 பரீட்சார்த்திகள் தேற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.