செஞ்சோலை வான்ப​​டைத் தாக்குதல் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

முல்லைத்தீவு - செஞ்சோலை வளாகத்தில் சிறீலங்கா வான்படையின் குண்டு வீச்சுத்தாக்குதலில் 54 மாணவர்கள் 03 பணியாளர்கள் உட்பட 57 பேர் படுகொலை செய்யப்பட்ட 18 ம் ஆண்டு நினைவு நாள் இன்றையதினம் செஞ்சோலை வளாகத்திற்கு செல்லும் பிரதான வீதிக்கு அருகாமையில் இடம்பெற்றது.

இறந்த மாணவர்களின் பெற்றோர், கிராம மக்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புகளின் உறுப்பினர்கள் எல்லோரும் இணைந்து திருவுருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில்  குறித்த நினை​வேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006.08.14 ஆம் திகதியன்று வள்ளிபுனம் – இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் விமானத்தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் இன்று (14) இந்நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.

உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி, அக வணக்கம் செலுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த அஞ்சலி  நிகழ்வில் இளைஞர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும்  கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.