இலங்கை - அவுஸ்திரேலிய புரிந்துணர்வு ஒப்பந்த காலம் மேலும் நீடிப்பு!
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் காலத்தை மேலும் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பிலான குறித்த ஒப்பந்தத்தை எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு அமைச்சர் நளின் பெர்ணான்டோவினால் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய எதிர்வரும் 2027ஆம் ஆண்டு வரை குறித்த ஒப்பந்தத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.