வளரும் நாடுகளை கடனாளியாக்கும் போருடன் வல்லரசு நாடுகள்

வளரும் நாடுகளை கடனாளியாக்கும் போருடன் வல்லரசு நாடுகள்

வல்லரசு நாடுகள் போருக்காக செலவிடுகின்றன - வளரும் நாடுகள் கடன்சுமையில் உள்ளன!

போருக்காக, ரஷ்யா ஒரு பக்கம் அதிக நிதியை செலவழிப்பதோடு, மேற்குலகம் மறுபுறம் அதிக பணத்தை செலவு செய்வதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற 2021-2022 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மட்டும் யுக்ரைனுக்கு 100 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

மேலும், இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாகி வருகிறது. 

சம்பந்தப்பட்ட நாடுகள் அதிக அளவில் விமானங்கள் மற்றும் போக்குவரத்துக் கப்பல்களைப் பயன்படுத்தி தங்கள் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு பெருமளவு பணத்தைச் செலவிடுகின்றன.

அடுத்த சில ஆண்டுகளில் மாத்திரம் 100 பில்லியன் டொலர்களுக்கு மேல் இதற்காக செலவிடப்படவுள்ளது.

அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இதற்காக அதிக பணத்தை செலவழிக்கின்றன.

இந்த நாடுகளிடம் பணம் இருப்பதால் தான் ஆயுதங்கள் மற்றும் பல்வேறு நோக்கங்களுக்காக இவ்வளவு நிதியை செலவு செய்கின்றன. 

பல்வேறு அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் கடன் சுமையில் உள்ளன.

இந்த நிலையில் இருந்து மீள நடவடிக்கை எடுத்த முதல் நாடு இலங்கையாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.