பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஹோமாகமையில் கைது!

ஹோமாகமை நியதவல பகுதியில் வைத்து பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஹோமாகமையில் கைது!

ஹோமாகமை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கம்பளை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேகநபருக்கு எதிராக வர்த்தக நிலையத்தை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் என்பவற்றை கொள்ளையிட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.