பாரிஸ் லாச்சப்பலில் தமிழீழத் தேசியநிகழ்வுகள்
பாரிஸ் லாச்சப்பலில் வழமை போல இவ்வாண்டும் தமிழீழத் தேசிய நிகழ்வுகளாக 27 .11 .2024 அன்று பகல் 12 : 35 மணிக்கு தமிழீழத் தேசிய மாவீரர் நாள் எழுச்சிகரமாக நினைவு கூரப்படும்.
அதற்கான ஏற்பாடுகளை பாரிஸ் வர்த்தகர்களுடன் இணைந்து தமிழீழ மக்கள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுத்து வருகிறார்கள்.
தமிழ் மக்கள் அனைவரும் நிகழ்வில் கலந்துகொண்டு மாவீரத் தெய்வங்களுக்கு வணக்கங்களை செலுத்த முடியும்.
இதற்கு முன்பதாக 26 11 2024 பிற்பகல் 14 மணி முதல் 20 மணிவரை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 70 ஆவது பிறந்த நாள் நிகழ்வுகள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். நிகழ்வில் வழமையான அம்சங்களுடன் பல கலைநிகழ்ச்சிகள் புலியழகன் எனும் தலைவரின் புகழ்பாடும் புதிய பாடல்கள் அடங்கிய இறுவட்டும் வெளியிடப்படும். நிகழ்வில் அனைத்து மக்களும் உங்கள் உறவினர் நண்பர்கள் சகிதம் கலந்துகொண்டு தமிழர் பெருமையாம் தலைமகனைப் போற்றுவோம்.