இந்த மாத இறுதிக்குள் நீர் கட்டணங்கள் குறைப்பு!

இந்த மாத இறுதிக்குள் நீர் கட்டணங்கள் குறைப்பு!

பெப்ரவரி மாத இறுதிக்குள் நீர் கட்டணங்கள் குறைக்கப்படும் என்று நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதிகள் அமைச்சு அறிவித்துள்ளது.

சிறிய அளவில் தண்ணீரைப் பயன்படுத்துபவர்களுக்கு அதிக நன்மைகளை வழங்குவதே நீர் கட்டணக் குறைப்பின் நோக்கம் என்று அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.

நீர் கட்டணங்களைக் குறைப்பதற்கான பல திட்டங்கள், மின்சாரக் கட்டணங்களில் 20% குறைப்புடன், முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டங்கள் அனைத்தையும் மதிப்பாய்வு செய்து அறிக்கையை வழங்குமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நீர் கட்டணங்களை நிர்ணயிக்கும் போது, மின்சாரக் கட்டணங்கள் சுமார் 40% மட்டுமே பங்களிக்கின்றன என்றும் இதனை கருத்தில் கொண்டு, புதிய விலை நிர்ணயம் அறிவிக்கப்படும் என்றும் அவர்   குறிப்பிட்டுள்ளார்.