சீனாவில் மண்சரிவு - 30க்கும் மேற்பட்டோர் மாயம்!

சீனாவின் தென்மேற்கிலுள்ள ஸிசூவான் மாகாணத்தில் இன்று (08) திடீரென ஏற்பட்ட மண்சரிவினால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அவசரக்கால மேலாண்மை அமைச்சின் சார்பில் நூற்றுக்கணக்கான மீட்புப் படை வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது வரை மண்ணுக்குள் புதைந்த 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், மண்சரிவினால் காணாமல்போன 30க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தனது அனுதாபத்தை தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் அந்நாட்டு அதிகாரிகள் உடனடியாக காணாமல் பேனவர்களை தேடி மீட்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அந்நாட்டு பிரதமர் லி கியாங் அப்பகுதியைச் சுற்றியுள்ள இடங்களின் புவியீயல் குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொள்ளுமாறும், ஆபத்தான இடங்களில் வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.