வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (14.01.2023) வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பு!
இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தினால் இன்று (14.01.2023) காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பு:
மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் சிறிதளவான மழை காணப்படும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான காலநிலையே நிலவும்.
ஊவா, மத்திய, வடமேற்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் அம்பாறை, அம்பாந்தோட்டை, கேகாலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மணித்தியாலத்திற்கு 30km/h - 40km/h வேகத்தில் அவ்வப்போது சற்று பலமான காற்று வீச கூடும்.
சப்ரகமுவ, மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்திறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் அதிகாலை வேலைகளில் பனிமூட்டம் காணப்படும்.
கடல் பிராந்தியங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
மழை நிலைமை:
இலங்கை தீவை சுற்றியுள்ள கடல் பிராந்தியங்களில் சீரான காலையிலேயே நிலவும்.
காற்றின் நிலைமை:
கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 30km/h - 40km/h வரையான வேகத்தில் வடகிழக்கு திசையில் இருந்து காற்று வீசும்.
இந்த காற்றின் வேகமானது சில சந்தர்ப்பங்களில் கொழும்பு முதல் புத்தளம், மன்னார் ஊடான காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியம் மற்றும் பொத்துவில் முதல் அம்பாந்தோட்டை ஊடான மாத்தறை வரையான பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50km/h - 60km/h வரையான வேகத்தில் அதிகரித்து வீச கூடும்.
கடல் நிலைமை:
கொழும்பு முதல் புத்தளம், மன்னார் ஊடான காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியம் மற்றும் பொத்துவில் முதல் அம்பாந்கோட்டை ஊடான மாத்தறை வரையான கடல் பிராந்தியங்கள் அவ்வப்போது சற்று கொந்தளிப்பாக காணப்படும்.