நடுவானில் குலுங்கிய கத்தார் ஏர்வேஸ் - 12 பேர் காயம்!
கட்டார் தலைநகர் தோஹாவில் இருந்து அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் நோக்கி பயணித்த விமானம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) குலுங்கியதால் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
கட்டார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான QR017 என்ற விமானம் ஒன்று தோஹா நகரில் இருந்து டப்ளின் நகருக்கு விமானம் துருக்கி நாட்டின் ஊடாக பயணித்த போது குலுங்கியதாக டப்ளின் விமான நிலையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், டப்ளின் நகரில் விமானம் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. இதனையடுத்து விமான நிலையத்தில் தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புத்துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.
தொடர்ந்து விமானம் தரையிறங்கியவுடன் 6 விமான ஊழியர்கள் மற்றம் ஆறு பயணிகள் என மொத்தம் 12 பேர் வைத்தியசாலைக்கு அனுப்பி கொண்டுசெல்லப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை, கடந்த 21 ஆம் திகதி சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று கடுமையாக குலுங்கியதால் ஒருவர் உயிரிழந்ததோடு, 104 பயணிகள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.