408 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 44 ஆயிரம் பேர் இதுவரை கைது!
2023 செப்டெம்பர் மாத நிறைவு வரையான காலப்பகுதியில் 408 கிலோ 309 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
2023 செப்டெம்பர் மாத நிறைவு வரையான காலப்பகுதியில் 408 கிலோ 309 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
44,208 சந்தர்ப்பங்களில் குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கூறுகிறது.
குறித்த போதைப் பொருட்களுடன் 44,241 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் 12 கிலோ 995 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளும் 100 கிலோ 932 கிராம் ஹஷீஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, இன்றைய தினம் கட்டுநாயக்க – சரக்கு களஞ்சியத்தின் ஊடாக நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவர முயற்சிக்கப்பட்ட பொதியொன்றிலிருந்து 50 கிலோகிராம் நிறையுடைய “ஹசீஷ் ரக” போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுங்கத் திணைக்களத்தின் வருவாய் கண்காணிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.