இந்தியாவின் 75வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது!
இந்தியாவின் 75வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.
அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளான ஜனவரி 26ஆம் திகதி இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று அங்கு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அதேநேரம் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய குடியரவு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் அனைவரின் நிலையையும் உயர்த்துதல் என்பது இன்னும் எஞ்சி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இலங்கையிலும் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதன்படி, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தரிகரகத்தால் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதேவேளை, இந்தியாவின் 75ஆவது குடியரசுதின நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டியில் அமைந்துள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரகங்களில் இன்று காலை இடம்பெற்றன.
இந்தியாவின் தேசிய கொடி ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குடியரசு தின நிகழ்வில் இந்திய உதவி உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் இந்திய பிரஜைகள் என பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன், இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையைத் தொடர்ந்து இந்திய குடியரசு தலைவருடைய சிறப்புரை வாசிக்கப்பட்டது.