ஸ்பானியாவில் இருந்து காசா நோக்கிப் புறப்படும் கப்பல்!
ஸ்பானியாவில் இருந்து மிகவும் அத்தியாவசியமான மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் கப்பல் இந்த வார இறுதியில் காசா நோக்கிப் புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த ஸ்பானியக் கப்பல் - சைப்ரஸில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கப்பல் காசாவிற்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்காக புதிதாக திறக்கப்பட்ட கடல் மார்க்கத்தை பயன்படுத்தும் என நம்பப்படுகிறது.
அங்கு தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள துறைமுகத்துக்கு அருகில் ஆழமற்ற நீர்நிலைகள் இல்லாததால், காசாவைச் சென்றடையும் போது குறித்த கப்பல் எங்கு நங்கூரமிடப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
காசாவில் உள்ள மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாகவும், சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் பட்டினியால் உயிரிழப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் காசாவிற்கு கடல் மார்க்கமாக உதவி பொருட்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன.
இதற்காக அங்கு தற்காலிக துறைமுகம் ஒன்றை நிறுவுவதற்கு அமெரிக்கா முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.