இலத்திரனியல் சிகரெட் என்ற இ-சிகரெட்டுக்களுடன் நான்கு பேர் கைது!

இலத்திரனியல் சிகரெட் என்ற இ-சிகரெட்டுக்களுடன் நான்கு பேர் கைது!

பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனையோரை இலக்கு வைத்து விற்பனை செய்வதற்காக தயார் செய்யப்பட்டிருந்த இலத்திரனியல் சிகரெட் என்ற இ-சிகரெட்டுக்களுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியாக மதுவரித்திணைக்களம் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த இ - சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேகநபர்கள் அவற்றை இணையத்தளம் ஊடாக  விற்பனை செய்வதற்கு முயற்சித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, பேலியகொட  மற்றும் பாணந்துறை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொலைபேசிகளுக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள், வாசனை திரவியங்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் என்ற பெயரில் அவை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மதுவரித்திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜி. குணசிறி தெரிவித்துள்ளார்.