சீனாவில் வெள்ளப் பெருக்கு : 25 போ் உயிரிழப்பு!
சீனாவில் அளவுக்கு அதிகமாகப் பெய்துவரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 25 போ் உயிரிழந்ததாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தொடா் கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சிசுவான் மாகாணத்தில் வெள்ளத்தால் ஒரு கிராமமே அடித்துச் செல்லப்பட்டது.
அந்தப் பகுதியில் இருந்து 10 உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 29 போ் காணாமல் போயுள்ளனா்.
இது தவிர, ஹனுயான் மாவட்டத்திலுள்ள ஜின்ஹுவா கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஆற்றின் கரையில் இருந்த 40 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த வெள்ளத்தில் பாலங்கள் உடைந்து பாதை இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
முன்னதாக, ஷான்க்ஸி மாகாணத்தில் நெடுஞ்சாலை பாலம் ஒன்று பெருவெள்ளம் காரணமாக இடிந்து விழுந்ததில் அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் ஆற்றில் மூழ்கின.
இதில் 15 போ் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் காணாமல் போன 20 காா்கள் மற்றும் 30 பேரைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.