தமிழர் பிரதேசங்களில் புதிய சீரழிவுகள் - பணம் கூடியதால் புதிய பிரச்சினைகள்!

தமிழர் பிரதேசங்களில் புதிய சீரழிவுகள் - பணம் கூடியதால் புதிய பிரச்சினைகள்!

தமிழர் பிரதேசங்களில் சர்ப்பிரைஸ் கிப்ட்டால் (Surprise Gift  -ஆச்சரியமான பரிசு) சீரழியும் தமிழர்கள்.

தற்போது சர்ப்பிரைஸ் கிப்ட் என்பது இலங்கை மக்களை பிடித்து ஆட்டுவித்து வருவதாகவும் சீர்கேடுகள் இடம்பெறுவதாகவும்  சமூக  ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் வாழும் உறவினர்கள் , தாயகத்தில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சர்ப்பிரைஸ் கிப்ட் அனுப்புவது பாசஷனாகி விட்டது. 

பணத்தை மடித்து பூங்கொத்துகளாவும் தெரியாதவர்களிடம் தம் இளம் மனைவிக்காக, இளம் பெண்களுக்காக, காதலர்களுக்காக பரிசுப் பொருட்களை அனுப்புவதுமாக உள்ளனர்.

இன்னும் சிலர் தமது அன்புக்குரியவர்களுக்கு லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணம், பவுண், உடை, வாகனம், காணி, வீடு, கடை எனப் பலதரப்பட்ட விலை உயர்ந்தவையையும் வேண்டி அன்பளிக்காக 
வழங்குகிறார்கள்.

இதன் பின் விளைவுகள்....... பெயருக்கும், புகழுக்கும், ஆசைக்குமாக இவைகளை வேண்டிக்கொடுக்கும் புலம்பெயர் நாடுகளில் வாழ்வோர் கடனாளிகளாகவும் மாறுகிறார்கள். 

 இன்னும் சிலர் இதனால் வேலை இழந்தவர்களும் உண்டு. இன்னும் சிலர் அளவுக்கு அதிகமாக வங்கிகளில் கடன் எடுத்து அன்பளிப்புச் செய்தபடியால் தமது வங்கிக் கணக்குகளையும் இழந்து ஒன்றும் செய்யமுடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
 
சர்ப்பிரைஸ் கிப்ட்டால் அளவுக்கு மிதமிஞ்சி பணம் அன்பளிப்புச் செய்யப்படுவதால் தாயக இளம் சமூகமும் மாணவர்களும் ஆடம்பரத்தில் மூழ்கி, பணத்தின் அருமை தெரியாமல் மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களை வேண்டிப் பாவித்து , வாகன விபத்துக்களில் சிக்கி அநியாயமாக உயிரிழக்கின்றனர்.
 
இன்னும் பலர் போதைப்பொருள் மற்றும் போதைகளுக்கு அடிமையாகித் தமது வாழ்வை இழக்கின்றனர். இதனால் தாமும் கெட்டு சுற்றியுள்ளவர்களையும் கெடப்பண்ணி எதிகாலத்தை இழக்கின்றனர்.
 
சர்ப்பிரைஸ் கிப்ட்டால்  சில குடும்பங்கள் பிரிந்த சம்பவங்களும் கடந்த காலங்களில் இடம்பெற்றிருந்தன. 

அதுமட்டுமல்லாது அந்த காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படும் நிலையில் எமக்கு சம்பந்தம் இல்லாதவர்களிடம்  காணொளி செல்லும் சந்தர்ப்பங்களும் உள்ளன.

 அதேவேளை தனித்திருக்கும் நபர்களையும் , அவர்களின் வசதிகளையும் அறிமுகம் இல்லா நபர்களிடம் அறியப்படுத்துவதனால், கொலை கொள்ளை, திருட்டு என  அதன் பின் விளைவுகள் பாரதூரமாகி 
விடுகின்ற சம்பவங்களும் அதிகமாகியுள்ளன.
 
எனவே உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பணம் மற்றும் பரிசுகள் அனுப்புவது, அதுவும் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதை​ கொடுத்தனுப்புவது எத்தனை ஆபத்தை விளைவிக்கும் என்பதை ஆராயாது, இவ்வாறான சர்ப்பிரைஸ் கிப்ட் அனுப்புவது நல்லதல்ல.  

இதனை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆகவே இவ்விடையம் பற்றி புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்பவர்களும் தாயகத்தில் வாழ்பவர்களும் சற்று சிந்திப்பீர்களாக?...