இலங்கையில் சுமார் 50 ஆயிரம் போலி வைத்தியர்கள்!
நாடளாவிய ரீதியாக சுமார் 50 ஆயிரம் போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அந்த சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் பிரசாத் ஹேரத் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
போலி வைத்தியர்களை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.