முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - விமானப் படையினர் தீவிர கண்காணிப்பு!

மே மாதம் ஆரம்பித்த வேளையில் இருந்து முல்லைத்தீவு நகரை சுற்றி உலங்கு வானூர்தி மூலம் இலங்கை விமான படையினர் கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழின அழிப்பு நாளான மே மாதம் 18 ஆம் திகதி இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களை உறவுகள் நினைவு கூருகின்றனர். 

இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் இராணுவம், பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமானதாகும்.

இந்நிலையில் இவ்வருடம் மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியிருக்கும் நிலையில் என்றும் இல்லாதவாறு கடந்த இரு சில தினங்களாக உலங்கு வானூர்திகள் வானை சுற்றி நோட்டமிட்ட வண்ணம் இருக்கின்றன.

ஆகவே, இவ்வருடமும் அஞ்சலி நிகழ்வுகள் கெடுபிடிகளுக்குள் தானா? என்ற ஐயமும் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.