பேருந்து விபத்து 47 பேர் காயம்!

பிபிலை லிந்தகும்புர பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குறித்த பேருந்து விபத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 47ஆக அதிகரித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் பிபிலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபிலை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.