சீமெந்து மூடையின் விலை, 300 முதல் 400 ரூபாய் வரை குறைவடையும்!
சீமெந்து மூடை ஒன்றின் விலை, 300 முதல் 400 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் குறைவடையும் என நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சீமெந்து மூடை ஒன்றின் விலை, 300 முதல் 400 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் குறைவடையும் என நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன், இலங்கைக்கு சீமெந்தை கொண்டுவர எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் சந்தர்ப்பத்தில், சீமெந்து மூடை ஒன்றின் விலை, 300 முதல் 400 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில், குறைவடையும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்