சிவனோளி பாதமலை யாத்திரையில் போதைப்பொருட்களுடன் 106 பேர் கைது
போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற நூற்றுக்கும் அதிகமானோர் கடந்த ஜனவரி மாதத்தில் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஹட்டன் பிரதேச பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர,
“போதைப்பொருளற்ற சிவனொளிபாதமலை யாத்திரை ” என்ற தொனிப்பொருளின் கீழ் வெவ்வேறு வகையிலான போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வருபவர்களை கைது செய்வதற்காக தற்போது பல சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலங்கையின் வெவ்வேறு பிரதேசங்களிலிருந்து ரயில் , பேருந்து உட்பட தனியார் வாகனங்களில் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வருகைத் தருபவர்களை சோதனை செய்ய ஹட்டன் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த சோதனைகளின் பின்னர் கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் வெவ்வேறான போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வருகைத் தந்த சுமார் பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் நீதிமன்றில் முன்னலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறான போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வருகைத் தருபவர்களை கைது செய்வதற்கான சோதனை நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.