சீன தூதுவர் யாழ் விஜயம் - உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு!
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இரண்டாம் நாளாக நயினாதீவுக்கு விஜயம் செய்து மக்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டனர்.
இதன்போது, சீன அரசின் உலர் உணவுப் பொதிகளையும் மக்களுக்கு வழங்கி வைத்தனர்.
இலங்கை மற்றும் சீன பௌத்த நட்புறவு சங்கமும், சீனாவின் புத்த சங்கமும் இணைந்து சீனாவில் உள்ள பௌத்த மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் இலங்கையிலுள்ள வறிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
நயினாதீவு நாக விகாரையில் நடந்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 500 குடும்பங்களுக்கு உலர் உணவுபொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.