டிசம்பர் முதல் ஜனவரி வரை தமிழகம் மற்றும் இலங்கையில் ஏற்பட போகும் காலநிலை மாற்றங்கள்!

கடந்த 12ஆம் திகதி குறிப்பிட்டது போல் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் உருவாகியிருந்த காற்று சுழற்சியானது தற்போது இலங்கையின் தென்கிழக்காக நிலைகொண்டுள்ளதாக ஓய்வு பெற்ற முன்னாள் சிரேஷ்ட வானிலை அதிகாரி. க.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு நாட்களில் இலங்கையின் தெற்காக வந்து மன்னார் வளைகுடாவின் தெற்காக, அதன்பின்னர் குமரி கடல் பிராந்தியத்தின் தெற்காக சென்று அரபிக் கடல் பிராந்தியத்திற்குள் நுழையும்.

இதன் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் மழை பெய்யும்.

இதேபோன்று தற்போது தென் சீன கடல் பிராந்தியத்தில் இருந்து வந்து கொண்டிருக்கின்ற இன்னுமொரு காற்று சுழற்சி காரணமாக தெற்கு அந்தமான் கடல் பிராந்தியத்தின் ஊடாக நகர்ந்து எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மையாக வருவதன் காரணத்தினால் இந்த நாட்களிலும் இலங்கைக்கு அதிகளவு மழை வீழ்ச்சியை ஏற்படுத்தும். 

அதுமட்டுமல்லாது அதனை அடுத்தவரும் 27ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையான காலப் பகுதிகளில் மீண்டும் ஒரு காற்று சுழற்சியானது இலங்கைக்கு அண்மையாக வர வாய்ப்புள்ளது. 

இதேபோன்று அடுத்த வருடம் ஜனவரி மாதம் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இன்னும் ஒரு காற்று சுழற்சி உருவாக சாத்தியம் உள்ளது. 

எனவே மேற்குறிப்பிடப்பட்ட காலப் பகுதிகளில் இலங்கைக்கு அதிகளவான மழை பெய்யும் சாத்தியமுள்ளது.

இதில் பெரும்பாலும் அதிக மழையுடன் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன. 

எனவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.