எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? சென்னையின் வானிலை எப்படி? வானிலை மைய இயக்குனர் தகவல்!

சென்னை: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்தும் சென்னை வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது பற்றியும் இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? சென்னையின் வானிலை எப்படி? வானிலை மைய இயக்குனர் தகவல்!

மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னையில் பெய்த கனமழை ஒட்டுமொத்த நகரையே வெள்ளத்தில் ஆழ்த்தியது.

டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் அதிகாலை வரை கொட்டி தீர்த்த கனமழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

மழை விட்ட பின்னரும் வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலை முழுமையாக திரும்ப குறைந்தபட்சம் ஒருவார காலம் ஆனது. 

மழை பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில், சென்னையில் இன்றும் மழை பெய்ய தொடங்கியது.

இடைக்கடை லேசான மழை பெய்து வருகின்றது. தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. 

எனினும், சென்னையில் கடந்த ஒரு வாரமாக மழையின்றி பனியின் தாக்கம் அதிகரித்தது. 

இந்த நிலையில், இன்று மிதமான மழை பெய்தது. சென்னையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 5 நாட்கள்: 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் கூறியதாவது:- 

தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் 5 தினங்களுக்கு தென் தமிழக பகுதிகளில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கனமழை மற்றும் அடைமழை எச்சரிக்கையை பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவடடங்களில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

16 ஆம் திகதி புதுக்கோட்டை ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் டெல்டா மாவட்டங்கள், மதுரை விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் எப்படி?

17 ஆம் திகதி கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் அரியலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

18 ஆம் திகதி தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு நகரின் சிலபகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று அவர் தெரிவித்தார். 

இதனையும் வாசிக்க - 

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? சென்னையின் வானிலை எப்படி? வானிலை மைய இயக்குனர் தகவல்!

காற்றின் வேகம் அதிகரிக்கும் - வடக்கு கிழக்கு மழைவீழச்சி விபரம்!காற்றின் வேகம் அதிகரிக்கும் - வடக்கு கிழக்கு மழைவீழச்சி...
உடவளவ நீர்த்தேக்கத்தின் ஊடாக பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!உடவளவ நீர்த்தேக்கத்தின் ஊடாக பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய...
மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் நியமனம்!  - பொதுஜன பெரமுன!மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் நியமனம்! - பொதுஜன பெரமுன!