கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய திருச்சொரூப பவனி ஆரம்பம்!

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய திருச்சொரூப பவனி  ஆரம்பம்!

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் திருச்சொரூப பவனி சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. 

கொட்டாஞ்சேனை - புனித லூசியாஸ் தேவாலயத்தில் இருந்து திருச்சொரூப பவனி ஆரம்பமாகியுள்ளது. 

இதன் காரணமாக குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (13) காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

திருவிழாத் திருப்பலி ஆராதனைகள் தமிழ் - சிங்கள மொழிகளில் நடைபெற்று வருகின்றது.

திருப்பலி ஆராதனைகள் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.