பொலன்னறுவை - மன்னம்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் திருத்தங்கள்!
பொலன்னறுவை - மன்னம்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் மாணிக்கம் பட்டிய வீதியில் 160 ஆவது மைல்கள் பகுதியில் அமைந்துள்ள ரயில் கடவையில் எதிர்வரும் 10,11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்த வேலை காரணமாக எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 7 மணிமுதல் 11 ஆம் திகதி இரவு 8.30 வரையில் பகுதியளவிலும், 12 ஆம் திகதி காலை 7 மணிமுதல் 13 ஆம் திகதி இரவு 8.30 வரையில் முற்றாகவும், குறித்த ரயில் கடவை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் மாற்று வழியாக முஸ்லிம் கொலனி பாதையை பயன்படுத்துமாறு ரயில் திணைக்களம் பொது மக்களை கோரியுள்ளது.