தினேஷ் ஷாப்டர் மரணித்த தருணத்தில் அணிந்திருந்த ஆடைகள் குறித்த நீதிமன்ற உத்தரவு!
அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள வர்த்தகர் தினேஷ் சாப்டர் மரணித்த போது அணிந்திருந்த ஆடைகளை மீண்டும் பெற்றுக்கொள்ளுமாறும், அவர் உயிரிழப்புச் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள
அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள வர்த்தகர் தினேஷ் சாப்டர் மரணித்த போது அணிந்திருந்த ஆடைகளை மீண்டும் பெற்றுக்கொள்ளுமாறும், அவர் உயிரிழப்புச் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐவரடங்கிய விசேட வைத்திய குழுவுக்கு அவற்றை அனுப்பி வைக்குமாறும் கொழும்பு நீதவான் நீதிமன்றம், குற்றவியல் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
வர்த்தகர் தினேஷ் சாப்டரின் உயிரிழப்புச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் அழைக்கப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்ரா ஜயசூரியவினால் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின் போது முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலனை செய்த நீதவான், உயிரிழந்த இடம் மற்றும் வாகனத்திலிருந்து பொலிஸ் தடயவியல் பரிசோதனை குழுவினால் கண்டுப்பிடிக்கப்பட்ட பொருட்களையும் விசாரணைக்காக விசேட வைத்திய குழுவுக்கு ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளாா்.
அதனை தொடர்ந்து , இதனுடன் தொடர்புடைய அடுத்த விசாரணை அறிக்கை எதிர்வரும் செம்டெம்பா் மாதம் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதவான் அறிவித்துள்ளாா்.