இலங்கையின் சனத்தொகையில் வீழ்ச்சி

இலங்கையின் சனத்தொகையில் வீழ்ச்சி

கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப் பகுதியில் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இலங்கை சனத்தொகை குறித்த காலப் பகுதியில் 144,395 ஆல் குறைவடைந்துள்ளது.

குறித்த காலப் பகுதியில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.