திறைசேரி செயலாளருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நிராகரிப்பு

திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

திறைசேரி செயலாளருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நிராகரிப்பு

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக செயற்பட தவறியதனூடாக திறைசேரி செயலாளர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றஞ்சாட்டி குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்தநிலையில், திறைசேரி செயலாளரினால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனையின் அடிப்படையில் குறித்த மனுக்களை தள்ளுபடி செய்து, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், நாடாளுமன்றம் மற்றும் பொது நிதி தொடர்பான விவகாரங்களை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என எதிர்தரப்பு எழுப்பிய ஆட்சேபனையையும் நீதியரசர்கள் குழாம் நிராகரித்துள்ளது.