இலங்கையில் இந்த ஆண்டில் 16 நில அதிர்வுகள் பதிவு!
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 16 நிலஅதிர்வுகள் பதிவாகியுள்ளன.
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 16 நிலஅதிர்வுகள் பதிவாகியுள்ளன.
அவற்றில் 06 நில அதிர்வுகள் புத்தல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கைத் தீவை சுற்றியுள்ள கடல் பகுதியில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்றிரவு மொனராகலை – புத்தல பகுதியில் சிறிய அளவிலான நில அதிர்வு ஒன்று பதிவாகியிருந்தது
இது ரிக்டர் அளவுகோலில் 2.4 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளது.