இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் கடும் மின்னல் தாக்க எச்சரிக்கை!
இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக மின்னல் தாக்கம் குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பதுளை, இரத்தினபுரி, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பதுளை மற்றும் கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அத்தனுகலு ஓயா, நில்வளா கங்கை மற்றும் களு கங்கையை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.