ஹட்டன் பேருந்து நிலையம் பூட்டு - புதிய தரிப்பிடங்கள் அறிவிப்பு!

ஹட்டன் பேருந்து தரிப்பு நிலையத்தில் திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால் மூடப்படவுள்ளதாக பேருந்து நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பேருந்து தரிப்பிடம் குன்றும் குழியுமாக உள்ளமையால் தொடர்ச்சியான முறைப்பாடுகளின் அடிப்படையில் தற்போது திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

திருத்தப்பணிகள் காரணமாக வெளிப் பிரதேசங்களுக்குச் செல்லும் பேருந்து தரிப்பிடங்கள் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய ஹட்டன் பொகவந்தலாவை-மஸ்கெலியா- ஒஸ்போன் – நோட்டன்- காசல்ரீ-சாஞ்சிமலை- ஓல்டன்-போடைஸ் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் ஹட்டன் தபால் நிலையம், சுசி ஆடையகம் ஆகிய பகுதிகளில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டனிலிருந்து- கொழும்பு – கண்டி – தலவாக்கலை- வட்டவளை-நாவலப்பிட்டி- நுவரெலியா-உட்பட அப்பகுதியில் செல்லும் தனியார் – அரச பேருந்துகள் கார்கில்ஸ் புட் சிட்டி அமைந்துள்ள பகுதிகளில் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.