அவசர மருத்துவத் தேவைக்கு 30 பில்லியன் ரூபாய் சுகாதார அமைச்சு அனுமதி!
அவசர மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சுகாதார அமைச்சின் ஒதுக்கீட்டுக்காக மேலதிகமாக 30 பில்லியன் ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அவசர மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சுகாதார அமைச்சின் ஒதுக்கீட்டுக்காக மேலதிகமாக 30 பில்லியன் ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மாதங்களுக்கான மருத்துவ விநியோகத்துக்காக இந்த ஒதுக்கீடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, புதிய மருத்துவ சட்டமொன்றை 6 மாதங்களுக்குள் வரையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போதைய மருத்துவ கட்டளைச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதன் மூலம் சிறந்த சுகாதார சேவையை வழங்குதல் மற்றும் பிரஜைகளின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த சட்டத்தை வரையுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.