வரிகளை விதிப்பதால் நாட்டை  ஒரு போதும் மீட்டெடுக்க முடியாது நாமல்!

வரிகளை விதிப்பதால் நாட்டை  ஒரு போதும் மீட்டெடுக்க முடியாது நாமல்!

வரி விதிப்பதும் சொத்துக்களை விற்பது மட்டுமே அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான‌
ஒரே வழி எனில் நாட்டு மக்களால் நிம்மதியாக வாழ முடியாது என   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இரத்தினபுரி நிவிதிகல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் அபிவிருத்தி செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அது மாத்திரமன்றி இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்புகளைஇழந்ததுடன்‌   வர்த்தகர்களும் பாரியளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ வின் ஆட்சிக்காலத்தில்  நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக மாயையொன்றை  தோற்றுவித்து எமது அரசாங்கம் சதியால் வீழ்த்தப்பட்டது.

இன்று வரிசைகள் ஒழிக்கப்பட்டதாக் கூறப்படுகின்ற போதிலும் கடவுச்சீட்டு வரிசை தொடர்ந்ததும் நீண்டுக்கொண்டே சென்றது.

அதனைக் கட்டுப்படுத்த ஒரு புறம்  நடவடிக்கை எடுக்கும்போது விமான நிலையத்தில் விசாவுக்கு வரிசையொன்று  ஏற்பட்டுள்ளது.

மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவில் வரிகளை விதிப்பதால் நாட்டையும் மக்களின்  வாழ்க்கைத் தரத்தையும் ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ  தெரிவித்தார்.