10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு!

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு!

இலங்கையில் பத்து மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று (26) மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
 
களுத்துறை, காலி, பதுளை, கண்டி, கேகாலை, மாத்தறை, குருநாகல், இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
குறித்த பகுதிகளில் வசிப்பவர்கள் திடீரென நீர் கசிவு, சுவர்கள் மற்றும் நிலத்தில் விரிசல் ஏற்படுவதை அவதானித்தால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

 இதேவேளை, கொழும்பில் பெய்து வரும் கன மழை காரணமாக கோட்டை உட்பட பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல மாகாணங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் இவ்வாறான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.