ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிதியமைச்சு வசமானது!  

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிதியமைச்சு வசமானது!  

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தேசிய விமான சேவை நிறுவனத்தை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
 
புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் கடமைகள் மற்றும் செயல்பாடுகளை கோடிட்டுக் காட்டும் வகையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நேற்று (25) வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
 
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிடுவது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த வருடம் ஒக்டோபர் மாதம், ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவையை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட்டு, அதிக இலாபகரமான நிறுவனமாக அதனை மறுசீரமைக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்போது, ​​ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சரத் கனேகொட, இலங்கையர்கள் அனைவரும் பெருமைப்படும் ஒரு நிறுவனமாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் இருக்க வேண்டும் என்றும், அது இலங்கையர்களுக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி திஸாநாயக்க அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.