வாக்னர் கூலிப்படை தலைவரின் விமான விபத்து - நேரில் பார்த்த கிராமத்தவர்கள் கூறிய தகவல்கள்!
ரஷ்யாவின் கூலிப்படைதலைவர் கொல்லப்படுவதற்கு காரணமாக அமைந்த விமான விபத்து இடம்பெற்ற ரஷ்ய கிராமத்தை சேர்ந்த மக்கள் முதலில் பாரிய சத்தமொன்று கேட்டதாகவும் பின்னர் விமானம் தரையை நோக்கி செல்வதை அவதானித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் கூலிப்படைதலைவர் கொல்லப்படுவதற்கு காரணமாக அமைந்த விமான விபத்து இடம்பெற்ற ரஷ்ய கிராமத்தை சேர்ந்த மக்கள் முதலில் பாரிய சத்தமொன்று கேட்டதாகவும் பின்னர் விமானம் தரையை நோக்கி செல்வதை அவதானித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
எம்பிரேயர் லெகசி 600 என்ற தனியார் விமானம் ரஷ்யாவின் வெர் பிராந்தியத்தின் குஜென்கினோ கிராமத்திற்கு அருகில் விழுந்து நொருங்கியது.
மொஸ்கோவிலிருந்து செயின்பீட்டர்ஸ்பேர்க்கினை நோக்கி பத்து பேருடன் பயணித்துக் கொண்டிருக்கையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த அனர்த்தத்தின் போது விமானத்திலிருந்த அனைவரும் உயிரிழந்தனர்.
பிரிகோஜினிற்கு என்ன நடந்தது என கிரெம்ளினோ அல்லது ரஷ்ய பாதுகாப்பு தரப்போ இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை.
எனினும் வாக்னர் கூலிப்படைக்கு சொந்தமான கிரேஜோன் என்ற டெலிகிராம் குழுமம் பிரிகோஜின் விமான விபத்தில் பிரிகோஜின் உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளது.
விமானம் விழுந்து நொருங்கிய பகுதிக்கு சென்ற ரொய்ட்டர் செய்தியாளர் சடலங்கள் கறுப்பு பைகளில் எடுத்துச் செல்லப்படுவதை அவதானித்துள்ளனர்.
தடயவியல் நிபுணர்கள் அந்த பகுதியில் முகாமிட்டுள்ளனர். அரைவாசி கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட கட்டிடமொன்றிற்கு அருகில் விமானத்தின் சில சிதைவுகளை அவதானிக்க முடிகின்றது.
இதுகுறித்து பிரதேசவாசியான விட்டெலி ஸ்டெபெனொக் (72) என்பவர் கூறுகையில், “பாரிய சத்தமொன்றை கேட்டேன். வழமையாக நிலத்தில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றால் எதிரொலியொன்று கேட்கும்.
ஆனால் எனக்கு வேறு விதமான பாரிய சத்தமொன்று கேட்டது. நான் மேலே பார்த்தேன் வெள்ளை புகைமண்டலம் தெரிந்தது” என தெரிவித்துள்ளார்.
விமானத்தின் சிறகு ஒரு பக்கத்தில் சென்றது. விமானத்தின் மற்றைய பாகமும் அப்படியே சென்றது.
பின்னர் அது ஒரு இறக்கையுடன் தரையை நோக்கிசென்று மோதியது.
இது இடியல்ல உலோக இடி என தெரிவிக்கும் அந்த கிராமத்தை சேர்ந்த அனடொலி என்பவர் இதற்கு முன்னரும் இதேபோன்ற சத்தங்களை கேட்டிருக்கின்றேன் என தெரிவித்தார்.
ரஷ்ய இராணுவத்திற்கு எதிரான கிளர்ச்சிக்கு பிரிகோஜின் தலைமை தாங்கி இரண்டு மாதங்களாகியுள்ள நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.