ஜப்னா கிங்ஸால் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட சிங்கள வீரர் - 4 வது லங்கா பிரீமியர் லீக் - முழு விபரம் உள்ளே!
நான்காவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலம் கொழும்பில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இடம்பெற்றது. லங்கா பிரிமியர் லீக் தொடரில் முதன்முறையாக இடம்பெறும் வீரர்களுக்கான ஏலத்தில் 204 தேசிய வீரர்களினதும், 156 வெளிநாட்டு வீரர்களினதும் பெயர்கள் உள்ளடங்கியிருந்தன.
நான்காவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலம் கொழும்பில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இடம்பெற்றது.
லங்கா பிரிமியர் லீக் தொடரில் முதன்முறையாக இடம்பெறும் வீரர்களுக்கான ஏலத்தில் 204 தேசிய வீரர்களினதும், 156 வெளிநாட்டு வீரர்களினதும் பெயர்கள் உள்ளடங்கியிருந்தன.
சுமார் 500 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்திற்காக விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் இறுதிகட்டமாக 160க்கும் குறைந்த வீரர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய ஏலத்தில் அதிக தொகைக்கு டில்ஷான் மதுஷங்க ஜப்னா கிங்ஸ் அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
அவர் 92 ஆயிரம் அமெரிக்க டொலருக்கு நீண்ட போட்டிக்கு மத்தியில் ஜப்னா கிங்ஸ் அணியினால் பெற்றுக்கொள்ளப்பட்டார்.
அவருக்கு அடுத்தபடியாக 80 ஆயிரம் அமெரிக்க டொலருக்கு சரித் அசலங்க, ஜப்னா கிங்ஸ் அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
துஷ்மந்த சமீர கண்டி (Falcons) அணி சார்பில் 70 ஆயிரம் அமெரிக்க டொலருக்கும், குசல் ஜனித் பெரேரா, தம்புள்ளை அவ்ரா (Aura) அணியினால் 40 ஆயிரம் அமெரிக்க டொலருக்கும், நிரோஷன் டிக்வெல்ல – கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் (Strikers) அணியினால் 44 ஆயிரம் அமெரிக்க டொலருக்கும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தினேஷ் சந்திமால், கண்டி அணியினால் 72 ஆயிரம் அமெரிக்க டொலருக்கும், சொயிப் மலிக், ஜப்னா கிங்ஸ் அணியினால் 50 ஆயிரம் அமெரிக்க டொலருக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
துனித் வெல்லலகே, ஜப்னா கிங்ஸ் அணியினால் 56 ஆயிரம் அமெரிக்க டொலருக்கும், இசுரு உதான, கண்டி (Falcons) அணியினால் 40 ஆயிரம் அமெரிக்க டொலருக்கும் பெற்றுக்கொள்ளப்பட்டனர்.
அதேநேரம், தனஞ்சய டி சில்வா மற்றும் பினுர பெர்ணான்டோ ஆகியோர் தம்புள்ளை அவ்ரா (Aura) அணியினால் தலா 76 ஆயிரம் அமெரிக்க டொலருக்கும், சஹான் ஆராச்சிகே, கண்டி அணியினால் 28 ஆயிரம் அமெரிக்க டொலருக்கும், ஹெய்டன் கெர் தம்புள்ளை அவ்ரா (Aura) அணியினால் 20 ஆயிரம் அமெரிக்க டொலருக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
நிரோஷன் டிக்வெல்ல கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணியினால், 44 ஆயிரம் அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
ஏலத்தில், ஒரு அணிக்கு தலா 5 இலட்சம் அமெரிக்க டொலர் ஒதுக்கிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணியிலும் தற்போது 2 வெளிநாட்டு வீரர்களும், 2 தேசிய வீரர்களும் அடங்கலாக 4 வீரர்கள் உள்ளனர்.
இந்த ஏலத்தின் ஊடாக ஒவ்வொரு அணியும் தலா 16 முதல் 20 வீரர்களை பெற்றுகொள்ள முடியும்.