இலங்கையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலை வெகுவாக குறைந்தது!

இலங்கையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலை வெகுவாக குறைந்தது!

இலங்கையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலை வெகுவாக குறைந்தது!

இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, 452 ரூபாயினால் குறைக்கப்பட உள்ளதாக, லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார்.

விலை குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்று விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று (04) முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவி்த்தார்.

உலக சந்தையில், எரிவாயு விலை குறைவடைந்துள்ளமை மற்றும் ரூபாவின் பெறுமதி மீளவும் வலுப்பெற்றுள்ளமை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டு, பொதுமக்களுக்கு சலுகையை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இறுதியாக, கடந்த மாதம் 3ஆம் திகதி லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலை குறைக்கப்பட்டது.

இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, 452 ரூபாவால் குறைக்கப்பட்டு, 3 ஆயிரத்து 186 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 181 ரூபாவால் குறைக்கப்பட்டு, ஆயிரத்து 281 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

2.3 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, 83 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 598 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

இதேவேளை, லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில், லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் எமது செய்திசேவை வினவியது,

அதற்கு பதிலளித்த அவர், நிறுவனத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர்களிடம் கலந்துரையாடி நாளைய தினம், விலைத்திருத்தம் தொடர்பில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.