மத்ரஸா மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு - சந்தேகநபர்களுக்கு பிணை

சாய்ந்தமருது மத்ரஸா மாணவன் மர்மமாக உயிரிழந்தமை தொடர்பான சிசிரீவி காணொளிகள் உள்ளிட்ட முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 4 சந்தேகநபர்களும், கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கின் விசாரணை இன்றைய தினம் கல்முனை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.
இதன்போது குறித்த சந்தேகநபர்களை தலா 10 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதவான் அனுமதியளித்துள்ளார்.
அத்துடன், மாத இறுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமையில் சாய்ந்தமருது காவல் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் என்பதுடன், வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சம்பவத்தின் மற்றுமொரு சந்தேகநபரான மௌலவி எதிர்வரும் 20ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.