போலந்தில் விமானம் விபத்து - ஐவர் உயிரிழப்பு - எண்மர் காயம்!
போலந்து தலைநகரில் வார்சோவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

போலந்து தலைநகரில் வார்சோவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த விமானத்தில் 13 பேர் பயணித்துள்ளனர்.
சீரற்ற வானிலை காரணமாக சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என மீட்பு படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற பகுதிக்கு 4 உலங்கு வானூர்திகளும் 10 நோயாளர் காவு வாகனங்களும் அனுப்பப்பட்டுள்ளன.