கந்தகாடு முகாமிலிருந்து கைதிகள் இன்றும் தப்பியோட்டம் - மோதலில் 7 பேர் காயம்!

கந்தகாடு முகாமிலிருந்து கைதிகள் இன்றும் தப்பியோட்டம் - மோதலில் 7 பேர் காயம்!

வெலிகந்த - கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 16 கைதிகள் இன்று காலை தப்பிச் சென்றுள்ளனர்.

தப்பியோடியவர்களை கைது செய்வதற்காக 2 காவல்நிலையங்களின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பியோடிய சிலர் சோமாவதிய புனித பூமி வளாகத்தில் தங்கியிருந்த நபர் ஒருவரை தாக்கி பணம் மற்றும் கைத்தொலைபேசியை அபகரித்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், தப்பிச் சென்ற கைதிகளில் சிலர் சோமாவதிய புனித பூமிக்கு அருகில் உள்ள சுற்றுலா விடுதிக்குள் நுழைந்து, அங்குள்ள பேருந்தை கடத்த முயன்றதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சுற்றுலா விடுதியில் இருந்தவர்களில் ஒருவர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி குறித்த கைதிகளை விரட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, இன்று மாலை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தப்பியோடிய 14 கைதிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வருடத்தில் இரண்டு தடவைகள் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து கைதிகள் தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.