காங்கேசன்துறை புகையிரதம் பற்றிய விசேட அறிவிப்பு

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கிய காங்கேசன்துறை இரவு அஞ்சல் ரயில் இன்று (14) முதல் மொரட்டுவை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, மொரட்டுவ ரயில் நிலையத்திலிருந்து மாலை 6.55 மணிக்குப் புறப்படும் காங்கேசன்துறை இரவு அஞ்சல் ரயில், கல்கிஸ்ஸை, தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களில் நின்று, கோட்டை ரயில் நிலையத்தை அடைந்து, இரவு 8.00 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படுமென குறிப்பிட்டுள்ளது.