வில்பத்து கடற்பரப்பில் இறந்த டொல்பின்கள் - விசாரணை தீவிரம்!
![வில்பத்து கடற்பரப்பில் இறந்த டொல்பின்கள் - விசாரணை தீவிரம்!](https://tamilvisions.com/uploads/images/202501/image_870x_677e8e254423c.jpg)
வில்பத்து தேசிய பூங்காவின் கரையோர எல்லையில் உயிரிழந்த நிலையில் 11 டொல்பின்கள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, வனவிலங்கு அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
வனவிலங்கு கால்நடை வைத்திய அதிகாரிகளான சந்தன ஜயசிங்க மற்றும் டபிள்யூ.எல்.யு. மதுவந்தி ஆகியோர் உயிரிழந்த டொல்பின்களை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
டொல்பின்கள் கரை ஒதுங்குவதற்கு முன்பு மீன்பிடி வலையில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
குறித்த அதிகாரிகளின் கண்டுபிடிப்புகள் நேற்று (ஜனவரி 7) புத்தளம் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.
இறப்புக்கான காரணத்தை உறுதி செய்வதற்காக, திசு மாதிரிகள் பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.