நரேந்திர மோடி அரசியலில் சாதித்த தளத்திற்கு சென்ற இலங்கை அரசியல் குழுவினர்!

நரேந்திர மோடி அரசியலில் சாதித்த தளத்திற்கு சென்ற இலங்கை அரசியல் குழுவினர்!

இந்தியப் பயணத்தின் இரண்டாவது நாள் சந்திப்புக்களை முடித்துக் கொண்டு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர்,  நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்தத் தளமான குஜராத்தை நோக்கிச் சென்றனர்.

இந்தக் தூதுக்குழு குஜராத் முதல்வர் புபேந்திர படேலை சந்தித்த பின்னர் மாநிலத்தில் சில சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குஜராத்தில் ஒரு காலத்தில் முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் அரசியலே பின்னர் இந்தியாவின் உயர்பதவிக்கு அவரை உயர்த்தியது.

இந்தநிலையில் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தூதுக்குழு நேற்று இந்தியாவின் முன்னணி சிந்தனைக் குழுவான ‘ஒப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன்’ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

அத்துடன் குழுவினர் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தை பார்வையிட்டனர். 

முன்னதாக, இந்தப் பயணத்தின் போது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலர் வினய் மோகன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை இந்த குழுவினர் பேச்சுவார்த்தையை நடத்தினர்.

இதேவேளை தூதுக்குழுவினர் கம்யூனிஸ்ட் கட்சியால் ஆளப்படும் இந்திய மாநிலமான கேரளாவுக்குச் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.