ஸ்ரீ லங்கன் “கோல்ட் ரூட்”டில் இரண்டாம் முறை பயணித்த சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை ஊடாக மீண்டும் தமிழகம் சென்ற போது இன்று (26) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள “கோல்ட் ரூட்” பிரத்தியேக ஓய்வறையில் சிறிது நேரம் தங்கியிருந்தார்.

நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் உள்ள “கோல்ட் ரூட்”டில் விமான நிலைய ஊழியர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 
 
நடிகர் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக ஸ்ரீ லங்கன் விமான சேவையின் “கோல்ட் ரூட்” பயணப் பாதையை பயன்படுத்தியுள்ளதாக விமான நிலைய ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

கோல்ட் ரூட் பயண சேவையானது, அர்ப்பணிப்புள்ள பணியாளர்களின் ஊடாக மிக உயர்தரமான சலுகைகள், முன்னுரிமை சேவைகள், பிரத்தியேக ஓய்வறை வசதி, பிரத்தியேக கடவுச் சீட்டு பரிசோதனை, கடவுச் சீட்டு கட்டுப்பாடு மற்றும் பயணப் பொதிகள் பாதுகாப்பு வசதி என்பன வழங்கப்படுகின்றன.

ஏற்கனவே, நடிகர் ரஜினி காந்த் ஸ்ரீ லங்கன் விமான சேவையின் ஊடாக சென்னையில் இருந்து மாலைதீவுக்கு பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Rajinikanth in BIA Gold Route