லிபியாவில் இரண்டு போட்டி அரசாங்கங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் - ஐ.நா. கவலை

லிபியாவில் அசாதாரண காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பறிபோன பெரும்பாலான உயிரிழப்புகளை தவிர்த்திருக்க முடியும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக வளிமண்டலவியல் அமைப்பின் தலைவர் பிட்டேரி தாலஸ்  கூறியுள்ளார்.

லிபியாவில் இரண்டு போட்டி அரசாங்கங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் - ஐ.நா. கவலை

அனர்த்தம் தொடர்பாக பொது மக்களுக்கு முன்கூட்டியே எச்சரித்திருக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லிபியாவில் இரண்டு போட்டி அரசாங்கங்கள் செயற்பட்டு வருகின்றன.

இது மக்களிடையே அனர்த்தம் தொடர்பான எச்சரிக்கை விரைவில் சென்றடைவதில் தாக்கம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லிபியாவில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை தொடர்பில் இரண்டு அரசாங்கங்களும் தனித்தனியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்தன.

இந்தநிலையில், இரண்டு நீர்த்தேக்கங்கள் உடைந்து அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ள டெர்னா நகரத்தில் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரத்துக்கு இடைப்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த நகரத்தின் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, லிபியாவுக்கு மேலதிக உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அங்குள்ள இரண்டு அரசாங்கங்களும் தற்போது ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.