உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றில் இதுவரை சமர்ப்பிக்கவில்லை! 

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் இதுவரையிலும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட0வில்லை என சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

உத்தேச பயங்கரவாத சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத் மற்றும் ஹரினி அமரசூரிய உள்ளிட்டவர்களால் உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்கள் இன்றைய தினம் உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மேலதிக மன்றாடியர் நாயகம், குறித்த சட்டமூலம், இதுவரையில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை என நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.