பேரூந்துகள் பகிர்ந்து வருவதில் அரசியல் நோக்கங்கள் எதுவும் இல்லை- சஜித்
பேரூந்துகள் பகிர்ந்து வருவதில் அரசியல் நோக்கங்கள் எதுவும் இல்லை என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்துள்ளார்,
மேலும் அவர் தனது உரையில், பிரபஞ்சம் பஸ் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ்,86 ஆவது கட்டமாக 50 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்துகள் , மாத்தறை, மஹிந்த ராஜபக்ச கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (18) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எங்களிடம் அரசியல் பொறாமைத்தனம் இல்லை.அதனால் தான் மஹிந்த ராஜபக்ஷ கல்லூரிக்கும் தம்புத்தேகம தேசிய பாடசாலைகளுக்கும் பேரூந்துகளை வழங்கினோம்.
தனக்கும் மகிந்தவிற்கும் இடையில் அரசியல் ரீதியிலான போட்டிகள் இருந்த போதிலும், பொறாமைத்தனமான எத்தகைய முட்டாள் எண்ணங்களும் தம்மிடம் இல்லாததன் காரணமாகவே, மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ கல்லூரிக்கு பேருந்தைக் நன்கொடையாக வழங்கி வைத்தோம் என்றும்,
மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை விட இப்பாடசாலையின் பிள்ளைகளின் எதிர்காலமே தமக்கு முக்கியமானது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
முறைமையில் மாற்றம் குறித்து பல விரிவுரைகள் கருத்துரைகள் நடந்தாலும், அது களத்தில் யதார்த்தமாக இருக்க வேண்டும். கொழும்புக்கு ஒரு கவனிப்பும், கிராமத்திற்கு மற்றுமொரு கவனிப்பும் காட்டாது அனைவருக்கும் சமமான கல்விக்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் இந்த பேருந்துகளும் ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு வழங்கப்பட்டு வரும் போது தனக்கு “பஸ் மேன்" என்று பெயர் சூட்டினர், இவ்வாறு "பஸ் மேன்" என்று பெயர் சூட்டியவர் கற்ற பாடசாலைக்கும் பேருந்து வழங்கப்பட்டதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அரசியல் நோக்கங்களை வைத்து தாம் பேருந்துகளை பகிர்ந்து வரவில்லை. நாட்டின் சம்பிரதாய அரசியல் போக்கைக்கூட நாம் மாற்றியமைத்துள்ளோம். மேடைகளில் சுவாரஸ்யமான வார்த்தைகளைச் சொன்னாலும் ரூபாய் , டொலர் பற்றாக்குறை தீர்ந்துவிடாது.
தனது தனிப்பட்ட பணத்தில் அன்றி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களின், கொடையிலேயே வேலைத் திட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதேபோன்று நாட்டின் டொலர் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வெற்றிகரமான வேலைத்திட்டங்கள் தம்மிடம் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இன்று அரசியல்வாதிகள் சொல்வதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தனக்கு பொருந்தாது. தான் தனது வாக்குறுதிகளை ஒருபோதும் மீறவில்லை. நாட்டிலேயே முதன்முறையாக எந்த கட்சியும் செய்யாத பணியை ஐக்கிய மக்கள் சக்தி செய்துள்ளது. எனவே, பழைய அரசியல் குப்பைக் குவியலுக்கு தானும் தனது குழுவினரும் சொந்தமானவர்கள் அல்லர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.